ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்று பணித்துறையில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
நம் முன்னோர்கள் நினைவாக மாதம் தோறும் அமாவசை அன்று திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். ஆனால் நவீன காலத்தில் மாதம்தோறும் வழிபாடு நடத்த முடியா தவர்கள் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை அன்று முதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது இந்துக்களின் நம்பிகையாக உள்ளது.
ஆடி அமாவாசையான இன்று நாகை மாவட்டம் பூம்புகாரில், காவிரி கடலோடு கலக்குமிடமான சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முதாதையர் நினைவாக தர்பணம் செய்து காவிரி மற்றும் கடலில் புனித நீராடி வழிபட்டனர். சுமங்கலிப்பெண்கள் எலுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை சங்கமத் துறையில் தண்ணிரில் விட்டு வழிபாடு நடத்தினர்.
ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசி யம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னிதீர்த்தம் எனப் படுகிறது. இங்கு ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீ ராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.