உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரல்பாக்கம் வேம்புலி அம்மன் கோயிலில் வரும் 4ல் மகா கும்பாபிஷேகம்

விரல்பாக்கம் வேம்புலி அம்மன் கோயிலில் வரும் 4ல் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, விரல்பாக்கம், வேம்புலி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.

வேம்புலி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, 27 ம் தேதி பந்தகால் பூஜையுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, வரும் 3ம் தேதி மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்தி சாந்தி,  தன பூஜை, முதல் கால யாக பூஜை வேள்விகள் நடைபெறுகிறது. தொடர்ந்து, 4ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்கனத்தில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று மாலை அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !