உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்

திருக்கோஷ்டியூரில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை திருவாடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருஆடிப்பூ உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 23ல் கொடியேற்றம் நடந்து காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் ஆண்டாள், பெருமாள் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. இன்று காலை சுவாமி புறப்பாடு முடிந்து மாலை 4:00 மணிக்கு தேருக்கு தலையலங்காரம் துவங்கும். இரவு அன்ன வாகனத்தில் ஆண்டாள் பெருமாள் திருவீதி உலா நடைபெறும். நாளை பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 9:30 மணி அளவில் ஆண்டாள் மற்றும் பெருமாள் தேரில் எழுந்தருளுகின்றனர். தேர் வடம் பிடித்தல் மாலை 4:30 மணி அளவில் துவங்கி தேரோட்டம் நடைபெறும். ஆக. 2 காலையில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !