உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை யொட்டி தேரோட்டம் நடந்தது. திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் 3:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிநேகவல்லி அம்மன் அமர்ந்த தேரை ஏராளமானபக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்பின் தேரில் எழுந்தருளினார். 5:30 மணிக்கு தேர் நிலைக்கு வந்துஅடைந்தது. அதனை தொடர்ந்து தேர்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக.1) தீர்த்தோஸ்தவம், யாக கும்பாபிேஷகம், நாளை அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும், 5ல் சுந்தரர் கைலாய காட்சியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !