சிங்கம்புணரியில் 1008 திருவிளக்கு பூஜை : சிங்க வாகனத்தில் பிடாரியம்மன்
ADDED :1164 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி 20 ஆம் ஆண்டாக 1008 திருவிழா பூஜை நடந்தது. திருப்பணிக்குழுத் தலைவர் ராம.அருணகிரி தலைமை வகித்தார். சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் திருவிளக்கு பூஜையை துவக்கிவைத்தார். பிடாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர். சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கோயில் சூப்பிரண்டு தன்னாயிரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.