உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா

சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த கொள்ளிடம ஆற்றக்கரையோரத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் பெண்கள் வழிபாடு செய்தனர்.

கொரோனா தலைவருக்கு பின் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் என குடும்பத்தோடு ஆற்றங்கரையில் வழிபட்டனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து கொள்ளிடக் கரையோரத்தில் பூ, பபழம, மஞ்சள்| கருகமணி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வைத்து படையல் இட்டு வேண்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் கணவருக்கு நீண்ட ஆயுள் நீடித்த செல்வம் வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கணவரோடு திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர். இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்று காலை முகங்களை பொதுமக்கள் குவிந்தனர் இதனால் ஆற்றங்கரை ஓரம் பரபரப்பாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !