தங்க தாமரை பீடத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் அருள்பாலிப்பு
ADDED :1200 days ago
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று வரலட்சுமி விரதம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று வரலட்சுமி விரததையொட்டி பத்மாவதி தாயாருக்கு, நாமார்ச்சனை, நித்யார்ச்சனை மற்றும் மூலவர், உற்சவர் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பத்மாவதிதாயார் உற்சவர் தாயார் ஆஸ்தான மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தங்க தாமரை பீடத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தாயாருக்கு 12 வகையான நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மகா மங்கள ஆரத்தியோடு வரலட்சுமி விரதம் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.