மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1149 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1149 days ago
அவிநாசி நாகதேவி கோவிலின், 35ம் ஆண்டு ஆடி பெருவிழா நடைபெற்றது.அவிநாசி சந்தை வளாகத்தில் அமைந்துள்ள நாகதேவி கோவிலின் 35 ம் ஆண்டு தீர்த்த குடம், பால் அபிஷேகம் மற்றும் அக்னி எடுக்கும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய, ஆடி பெருவிழா கடந்த வியாழன் அன்று அக்னி சட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியில் 50 ம் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, படைக்கலம் மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று முன் தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் தீர்த்த குடம் எடுத்து அங்கிருந்து ஊர்வலமாக நாகதேவி கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஞாயிறு)காலை கிடா வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும் என கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். மேலும், விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
1149 days ago
1149 days ago