பச்சையம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்
ADDED :1252 days ago
பல்லாவரம்: பளைய பல்லாவரம் பச்சையம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கடந்த 30 தேதி பந்தக்கால் முகூர்த்ததுடன் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 3ம் தேதி மலர் பூஜை. நேற்று 7ம்தேதி பெரும் பூஜையும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (8ம்தேதி) மாலை 6.00 மணிக்கு கரகம் வருதலும், மாலை 7.00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடைபெறுகிறது. இரவு 9.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.