காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலில் சத்திய நாராயண பூஜை
ADDED :1168 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் சாமி கோயில் துணை கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆடி மாத பௌர்ணமியையொட்டி சத்திய நாராயண பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மேற்கொண்டனர் .இதில் ஏராளமான பக்தர்கள் சத்யநாராயண விரத பூஜையில் கலந்து கொண்டனர்.இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகள் செய்யப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.