உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசியக்கொடி வண்ணத்தில் மிகுந்தது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம்

தேசியக்கொடி வண்ணத்தில் மிகுந்தது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம்

திருக்கோவிலூர்: தமிழகத்தில் மூன்றாவது பெரிய கோபுரமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிழக்கு ராஜகோபுரம் தேசியக்கொடி வண்ணத்தில் ஜொலித்தது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் விழாவை சிறப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் 192 அடி உயரமுள்ள தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரமான இக்கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கவிட்டபாபட்டது. பகலில் கொடி பட்டொளி வீசி பறந்த நிலையில் நேற்று இரவு கோபுரம் தேசிய கொடியின் நிறத்தில் மின்விளக்கால் ஒளிரூட்டப்பட்டிருந்தது. நகரவாசிகள் மட்டுமல்லாது அவ்வழியாக சென்ற வெளியூர் பயணிகளும் வாகனத்தை நிறுத்திவிட்டு வானுயர்ந்த கோபுரத்தில் அழகுற மிளிர்ந்த தேசியக் கொடியின் வண்ண நிறத்தை கண்டு மகிழ்ந்தனர். இதனை பலரும் தங்கள் செல்போனில் படம் எடுத்து பகிர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !