கொடை குறிஞ்சியாண்டவர் கோவிலில் பொது விருந்து
ADDED :1181 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக ஏராளமானவர் கலந்து கொண்ட அன்னதான நிகழ்வு நடந்தது. இதில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.