உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்ணத்தின் சக்தியை விவரிக்கிறார் வேதாத்ரி

எண்ணத்தின் சக்தியை விவரிக்கிறார் வேதாத்ரி


* உணவானது உடலில் மட்டுமே பாயும். ஆனால் நமது எண்ணமானது எங்கும் பாயும்.
* அறிவு காட்டும் பாதையை தேர்ந்தெடுத்தால், வாழ்வில் உயர்வடையலாம்.  
* யார் ஒருவர் எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல் இருக்கிறாரோ, அவர் ஞானியாவார்.
* எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்று கருது.
* மனிதர்கள் மனம் போன பாதையில் செல்ல விரும்புகின்றனர்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு.
* திறமையின்மை, பயம் என இரண்டுமே கவலையை அதிகரிக்கச் செய்யும்.
* மனதை அடக்கினால் அது அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* ஆசையை ஒழிக்க வேண்டாம். அதை சீர்படுத்து.
* பிறரை குத்திக்காட்டுவதுபோல் அறிவுரை கூறாதே.  
* உலகில் தீர்க்க முடியாத பிரச்னை என ஏதுமில்லை.
* ‘வாழ்க வளமுடன்’ என வாழ்த்தினால் உன்னைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும்.
* அனைவரையும் வாழ்த்தப் பழகினால் மனதில் பகைமை உணர்வே வராது.  
* தவறு செய்பவர்களுக்கு உடனே புத்தி சொல்லாதே. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !