மனக்கலக்கம் தெளிய வேண்டுமா...
ADDED :1225 days ago
திருமாலின் திருநாமம் ஆயிரம் என ஆழ்வார்கள் போற்றுகின்றனர். அவற்றுள், கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணுவே, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா, மதுசூதனா என்னும் பெயர்களை தினமும் ஜபிப்பது பலருக்கும் வழக்கம். இவற்றில் ஒன்று கேசவன். ஒருசமயம் கேசி என்ற அசுரனை திருமால் அழித்ததால் கேசவன் என பெயர் பெற்றார். இவரை மனக்கலக்கத்தை நாசம் செய்பவர் என்றும் பொருள் கொள்வர். நின்ற வடிவம். மேற்கைகளில் சங்கு, சக்கரம், கீழ் வலக்கை அபயம், கீழ் இடக்கை தொடை மீது இருத்தல் போன்ற வடிவங்களில் காணப்படும் இவர், சென்னை மயிலாப்பூர், காஞ்சிபுரம் கூவத்துார் தலங்களில் அருள் பாலிக்கிறார்.
இப்பெருமாளை நினைத்து வழிபட மனக்கலக்கம் இனி இல்லை.