போற்றலும் தூற்றலும் அவருக்கே!
ADDED :4836 days ago
பக்தனின் அடையாளம் என்ன என்பதை பக்தியில் சிறந்த பிரகலாதன் விஷ்ணு புராணத்தில் கூறுகிறான். எக்காரணம் கொண்டும் யார் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. மற்றவர்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. விவேகம் இல்லாதவர்களிடம் தான் இதுபோன்ற இழிகுணங்கள் இருக்கும், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக (மறைபொருள்) விஷ்ணு இருக்கிறார். அவரே உனக்குள்ளும், எனக்குள்ளும் உறைந்திருக்கிறார். யார் மீது அன்பு காட்டினாலும், அது அந்த பரம்பொருளையே சேரும். யாரை வெறுத்தாலும், நிந்தனையாகப் பழித்தாலும் அதுவும் அவரையே சேரும்.