வில்லியனூர் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்!
ADDED :4898 days ago
வில்லியனூர்: வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. வில்லியனூர் மார்க்கெட் வீதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் 84ம் ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த 6ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் காலை 10 மணிக்கு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி அரங்கர் அனந்தசயனம், 13ம் தேதி முத்துப்பல்லக்கு, 14ம் தேதி செடல் உற்சவம் நடந்தது.இதனைத் தொடர்ந்து நேற்றுதினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. @நற்று (16ம் தேதி) ஊஞ்சல் உற்சவம் நடந்தது.