காளியம்மன் கோயிலில் பால்குடம், முளைப்பாரி விழா
ADDED :1163 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் காளியம்மன், செங்கூத்த அய்யனார் கோயில் பால்குடம் மற்றும் முளைப்பாரி விழா நடந்தது. இதனைமுன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து முளைக்கொட்டு திண்ணை உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.பின்பு காளியம்மன்,செங்கூத்த அய்யனார் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்றனர்.காத்தாகுளம் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.