உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கிடாரம் இருளப்பசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

மேலக்கிடாரம் இருளப்பசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள இருளப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த செப். 7 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமத்துடன், அனுக்ஞை விநாயகர் பூஜை துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்குப் பின்பு தீபாராதனை பூர்ணாகுதி நடந்தது. காலை 9: 45 மணியளவில் கோயில் விமான கலசத்தில் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் இருளப்பசாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !