அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1130 days ago
சாயல்குடி: சாயல்குடி அரண்மனை அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதர், முத்து இருளப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.