ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1196 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2017 இல் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு வல்லபை ஐயப்பன் கோயிலில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன் சங்கரி, முருகன், பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி, கருப்பாயி அம்மாள், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று பகல் 12 மணியளவில் மூலவர் ஐயப்பனுக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.