நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
                              ADDED :1135 days ago 
                            
                          
                          கரூர் : நவராத்திரி விழாவுக்காக, கொலு பொம்மைகள் விற்பனை கரூரில் தொடங்கியுள்ளது. மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற, அரக்கனுடன், ஆதி பராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, 10வது நாள் வெற்றி கொண்ட நிகழ்வு, நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு நவராத்திரி விழா வரும், 25ல் தொடங்கி, அடுத்த மாதம், 4ல் நிறைவு பெறுகிறது. நவராத்திரி காலங்களில் வீடுகள், கோவில்களில், கொலுபொம்மைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படும். இதற்காக, கரூர், ஜவஹர் பஜாரில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சிறிய அளவிலான பொம்மைகள், 50 ரூபாயில் இருந்து, 300 ரூபாய் வரையிலும், குழு பொம்மைகள், 750 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் நகரில் நவராத்திரி பொம்மைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.