ராமலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாளய அமாவாசை ஏற்பாடு தீவிரம்
ADDED :1136 days ago
வாலாஜாபாத்: ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 25ம் தேதி தர்ப்பணம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம் பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில், தென்னகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு இணையாக, வட ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. இது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் வரும் 25ம் தேதி காலை முதல், மாலை வரை, தர்ப்பணம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.