உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் குறிஞ்சீசுவரர் கோவிலில் மண்டல பூஜை துவங்கியது

மேட்டுப்பாளையம் குறிஞ்சீசுவரர் கோவிலில் மண்டல பூஜை துவங்கியது

மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நகரில், புதிதாக கட்டிய குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர் குறிஞ்சீசுவரர் கோவிலில் மண்டல பூஜை துவங்கியது. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு புதிதாக குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர், குறிஞ்சீசுவரர் (சிவன்) கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதை அடுத்து மண்டல பூஜை துவங்கியது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் குறிஞ்சீசுவரர், குறிஞ்சி நாயகி அம்மன், முருகர் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !