கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி பிரதோஷ விழா
ADDED :1167 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின் மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.