காரைக்காலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு: கோவில்களில் சிறப்பு பூஜை
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். இந்நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதல் சனிஸ்வரபகவானை தரிசனம் செய்தனர்.முன்னதாக தர்பாரண்யேஸ்வரர்,சனிஸ்வரபகவான்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சல், சந்தனம், பால் உள்ளிட்ட பலவகையான திரவங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதுப்போல் கைலாசநாதர் கோவில், பார்வதிஸ்வரர்கள் கோவில், பத்ரகாளியம்மன், அம்மையார் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் புரட்டாசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சுவாமி தரிசனம் செய்தனர்.