கதலி நரசிங்க பெருமாள் கோயில் புரட்டாசி சனி வார விழா
ADDED :1447 days ago
ஆண்டிபட்டி: ஜம்புளிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கதலி நரசிங்கப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் செயல் அலுவலர் தங்க கலா, ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.