பழநியில் பயன்பாட்டிற்கு வந்தது 3வது வின்ச்
ADDED :1167 days ago
பழநி, திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயில் 3வது வின்ச் புதிய ரோப் மாற்றப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.பழநி மலைக்கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். மூன்று வின்ச் கள் உள்ள நிலையில் மூன்றாவது வின்ச் ரோப் பழுதடைந்ததால் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரோப் மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்த நிலையில் நேற்று விசேஷ பூஜை, தீபாராதனைக்குப்பின் 3வது வின்ச் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.