உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு நாளை துவக்கம்

வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு நாளை துவக்கம்

சென்னை : நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகி வருகின்றனர், சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்படுகிறது.

நவராத்திரி விழா, வடபழநி ஆண்டவர் கோயிலில் நாளை 26ம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 4ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அருள்பாலி்ப்பார் ஆகவே நவராத்திரி நாள் முழுவதும் பக்தர்கள் வருகைதந்து அனைத்து அலங்காரத்தையும் தரிசித்து அம்மன் அருள் பெற வேண்டுமாய் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.அந்த அலங்காரத்தின் மகிமையை எடுத்துச் சொல்லும் விதத்தில் நட்சத்திர பேச்சாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும் நாள்தோறும் நடக்கிறது. இத்துடன் இன்னும் சிறப்பு நிகழ்வாக ஏகதின லட்சார்ச்சனையும்,வித்யாரம்பம் நிகழ்வும் நடைபெறுகிறது.இந்த நவராத்திரி வடபழநி ஆண்டவருக்கு மட்டுமல்ல வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கொண்டாட்டம் கூடுதலாகவே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !