உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோயிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோயிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 5:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வைத்தியநாத சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளை ரகுபட்டால் செய்தார். கோயில் எதிரில் உள்ள தாமரை குளத்தில் நள்ளிரவு 3:30 மணி முதல், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !