மகாளய அமாவாசை : சிவன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1206 days ago
போடி: புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் உள்ள ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர் கோயிலில் நேற்று சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.