உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா: பக்தர்கள் வழிபாடு

சூலூர் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா: பக்தர்கள் வழிபாடு

சூலூர்: சூலூர் வட்டார அம்மன் கோவில் நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், கடந்த, 26 ம்தேதி நவராத்திரி விழா துவங்கியது. ஒன்பது, ஏழு படிகளை அமைத்து கொலு வைக்கப்பட்டது. காடாம்பாடி ஏரோ நகர் சாந்த சிவ காளியம்மன் கோவில், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவில், சின்னியம்பாளையம் மங்களாம்பிகை கோவிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை முடிந்து, நவராத்திரி பூஜை நடந்தது. பெண்கள் பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். கிராமப்புற கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் செய்து அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !