உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, யோகிராம் சுரத்குமார் ஆஷ்ரமத்தில்,  நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலுள்ள  யோகி ராம்சுரத்குமார் ஆஷ்ரமத்தில், நவராத்திரி விழா கடந்த, 26ல் முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலையில், மகான்கள் தியானம் செய்வது போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை, கிருஷ்ணர், விநாயகர், சிவன், பார்வதி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் பொம்மைகள், என, 300க்கும் மேற்பட்ட  கொலு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி, காலை மற்றும் மாலையில்,  அம்பாளுக்கும், பகவானுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !