நவராத்திரி விழா : ராமேஸ்வரத்தில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED :1116 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலில் நவராத்திரி விழா யொட்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு உஜ்ஜயினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது. பின் இக்கோயில் எதிரே உள்ள சன்னதி தெருவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்குடன் பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.