கலைமகள் பெயர்க்காரணம்!
ADDED :1167 days ago
சரஸ்வதியை கலைமகள் என்கிறார்கள். கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். அதற்கு கரையில்லை. தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லாக்கலைகளையும் கற்று விட முடியாது. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பர். சிவனைப் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை சந்திரன் உள்ளது. சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவுக்கு தான் தனக்கு கலைகள் தெரியும் என்று அடக்கத்துடன் காட்டுகிறாள்.