வெள்ளையூர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :4806 days ago
உளுந்தூர்பேட்டை: வெள்ளையூர் முத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் சக்தி கரகம், முத்துமாரியம்மன் காத்தவராயன் சாமி வீதியுலா நடந்தது.சாகை வார்த்தல் விழாவான நேற்று மதியம் 3 மணிக்கு அப்பகுதி மக்கள் கூழ் குடங்கள் சுமந்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு கொப்பரையில் கூழ் ஊற்றினர். தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு அலங்காரத்தில் காத்தவராயன் சுவாமி குதிரை வாகனத்திலும், முத்துமாரியம்மன் அன்னம் வாகனத்திலும் வீதியுலா நடந்தது.