உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் ஆதீனத்தில் எழுத்தாணி பால் விழா

பேரூர் ஆதீனத்தில் எழுத்தாணி பால் விழா

பேரூர்: பேரூராதீனத்தில், விஜயதசமியையொட்டி, எழுத்தாணி பால் விழா நடந்தது.

ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகள் கல்வி மற்றும் கலையின் சிறந்து விளங்க எழுத்தாணிப்பால் நடத்தப்படும். பேரூர் ஆதீன மடத்தில் நடந்த  எழுத்தாணிப்பால் நேற்று நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேன் தடவிய எழுத்தாணி கொண்டு, குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதினார். அதன் பின், குழந்தைகளின் கையை  பிடித்து, வாழை இலையில் நிரப்பப்பட்ட நெல்மணியில், எழுத கற்று கொடுத்தார். இந்நிகழ்ச்சியில், 25 குழந்தைகளுக்கு எழுத்தாணிப்பால் வழங்கி, கல்வி துவங்கப்பட்டது. வடவள்ளியில் உள்ள முத்தப்பன்  கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆச்சாரியா பாலகிருஷ்ணன், குழந்தைகளின் கையைப் பிடித்து நெல்மணியில், எழுதி, கல்வியை துவங்கி வைத்தார். இதில், முத்தப்பன் கோவில்  நிர்வாகம் சார்பில், குழந்தைகளுக்கு எழுது பலகையும், எழுதுகோலும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !