வரசித்தி விநாயகர் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1419 days ago
ஸ்ரீ காளஹஸ்தி:சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு இன்று ஆந்திர மாநில ஹைகோர்ட் உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாஸ் அவரது குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் துணை நிர்வாக அதிகாரி ரவீந்திர பாபு வழங்கினார்.இவர்களுடன் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி காணிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.