உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் பூக்குழி விழா

ராமேஸ்வரம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் பூக்குழி விழா

ராமேஸ்வரம்: நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் தர்ம முனீஸ்வரர் கோயிலில் பூக்குழி விழா நடந்தது.

ராமேஸ்வரம் என்.எஸ்.கே., வீதியில் உள்ள பழமையான தர்மமுனீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடினர். அதன்படி நேற்று முன்தினம் கோயில் முன்பு ஏராளமான தடிகளை தீயிட்டு, அதன்   தீ கட்டைகளை பரப்பினர். பின் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அங்கிருந்து பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். பின்   பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !