உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி யாக பூஜை

அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி யாக பூஜை

நத்தம், சாணார்பட்டி அருகே சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு காலை உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. மாலை மேல் பௌர்ணமி, சித்த யோக யாக பூஜைகள் நடந்தது. பின் சிவசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைப்போலவே நத்தம் மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண் பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் ருத்ர பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி பிடாரி அம்மன் கோவில், கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !