கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் நாம சங்கீர்த்தனம்
ADDED :1152 days ago
சூலூர்: கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் நாம சங்கீர்த்தனம் நேற்று முன்தினம் நடந்தது. சூலூர் அடுத்த கரவளி மாதப்பூரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி சனிக்கிழமைகள், அனுமன் ஜெயந்தி பூஜைகள் கோலாகலமாக நடக்கும். நேற்று முன் தினம் நான்காவது புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில், ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தியுடன் பக்தி பாடல்களை பாடினர். கோலாட்டம், கும்மியாட்டங்களை பெண்கள், சிறுமிகள் ஆடினர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.