உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயத்தின் வரலாறு என்ன? துருவுகிறது தொல்லியல் துறை

சிவாலயத்தின் வரலாறு என்ன? துருவுகிறது தொல்லியல் துறை

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமத்தில், ஏரிக்கைரையை ஒட்டி சிவலாயம் உள்ளது. பாழடைந்து கிடக்கும் இந்த கோவிலின் வரலாறு பற்றி கிராமத்தினர் யாருக்கும் தெரியவில்லை.

பாழடைந்து புதர் மண்டிக் கிடக்கும் இந்த கோவிலை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்தான செய்தி நமது நாளிதழில் வெளியானதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் சி.ஜி.லோகநாதன் நேற்று, சந்திரவிலாசபுரம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். இதில், கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் அடிப்பீடத்தில் கல்வெட்டு குறிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த கட்டமாக, அந்த கல்வெட்டு பிரதி எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என, லோகநாதன் தெரிவித்துள்ளார். பிரதி எடுக்கும் பணி முடிந்ததும், கோவிலின் தொன்மை குறித்தும், கோவிலின் கட்டட பாணியும் தெரியவரும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !