உழைக்க ஆரம்பிக்கலாமே...
ADDED :1102 days ago
லட்சாதிபதியாக இருந்த கிறிஸ்டோபர் கோடீஸ்வரராக உயர்ந்தார். அப்போது அவரது நண்பர், ‘‘உன்னிடம்தான் தற்போது கோடிக்கணக்கான பணம் உள்ளதே. இப்போதாவது வேலைகளை குறைத்து ஓய்வு எடுக்கலாம் அல்லவா... உன் வயதும் ஏறிக்கொண்டே செல்கிறது’’ என்றார்.
‘‘நண்பா... அது மட்டும் என்னால் முடியாது. சிறு வயதில் இருந்தே நான் வேலை செய்வதால், உழைப்பு என் ரத்தத்திலேயே ஊறிவிட்டது. இனி இதை நிறுத்த முடியாது’’ என சிரித்தார்.
பார்த்தீர்களா... நீங்களும் இப்படி உழைக்க ஆரம்பிக்கலாமே...