பிரச்னைக்கு தீர்வு
ADDED :1102 days ago
பாரசீகத்தை சேர்ந்த தத்துவ மேதையிடம் ஒருவர், ‘‘புல்லாங்குழலில் இருந்து இனிய இசை எழுகிறது. இதேப்போல் மற்றவற்றில் எழுவது இல்லையே...’’ எனக் கேட்டார்.
‘‘மூங்கிலின் நடுவில்தான் அதன் இதயம் இருக்கும். புல்லாங்குழலாக மாற்றும்போது அதில் துளையிடுவர். இதனால்தான் அதன் இதயத்தில் இருந்து இனிய இசை எழுகிறது. அது நம் இதயத்தை ஈர்க்கிறது’’ என்றார்.
இதுபோல்தான் நம் வாழ்வும். பிரச்னைகள் வரும்போது அதில் கிடைக்கும் படிப்பினை நம் வாழ்வை மேம்படுத்துகிறது.