பழநி மலைக்கோயில் ரோப்கார் பெட்டி பாறையில் மோதியது
பழநி: பழநி மலைக்கோயில் செல்லும் ரோப் கார் பெட்டி பாறையில் மோதியது.
பழநி மலைக்கோயில் சென்று வர மூன்று நிமிடத்தில் சென்றுவர ரோப் கார் சேவை பயன்பட்டு வருகிறது. நேற்று பழனி கோயில் மூலவர் பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் ரோப் கார் மூலம் மலைக்கோயில் சென்றனர் அதன் பின் அவர்களுடன் வந்த அலுவலர்கள் ரோப்காரில் ஏறி மலைக் கோயிலுக்கு சென்றனர். அப்போது அதிக எடையுடன் ரோப் கார் சென்றதால் கீழே உள்ள பாறையில் கடைசி பெட்டி மோதி அதற்கு முன்பிருந்த பெட்டியில் இடித்தது. உடனடியாக ரோப் கார் சில மணி துளிகள் நிறுத்தப்பட்டன. பெட்டிகள் நிலையாக நின்றபின் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது. ரோப்காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்தனர் மேலும் ரோப் காரில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்களை ஏற்றினர்.