உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் மன்னர் காலத்து நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் மன்னர் காலத்து நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

நரிக்குடி: நரிக்குடி கட்டனூரில் பழமை வாய்ந்த நடுதல் சிற்பம் கல்வெட்டு குறித்து கட்டனூர் பூசாரி பொன்ராஜ், பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், குமரன், சிவக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு சிற்பங்களையும் ஆய்வு செய்த போது, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாயக்கர் காலத்து நடுகல் சிற்பங்கள் என்றும், அக்காலத்தில் போர்களில் வெற்றி பெற்று, பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய வீரர்களின் நினைவாக இந்த நடுகல் சிற்பம் எழுப்பி இருக்கலாம் என தெரிவித்தனர். நடுகல் சிற்பம் வீரக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வீர தீர செயல்களில் திறமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது கட்டனூர் பகுதி பொதுமக்கள் தெய்வ வழிபாடாக வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !