வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் நடைபயணம்
ADDED :4819 days ago
வடமதுரை: வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்காக திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் வடமதுரை வழியே நடைபயணமாக சென்ற வண்ணம் உள்ளனர்.செப். 8ல் வேளாங்கண்ணி மாதா திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவிற்காக பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். பலர் கொடி, சிலுவையை ஏந்தியவாறும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக்ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறும் செல்கின்றனர்.