கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
துறையூர்: முசிறி அருகே கல்லூர் காந்திநகரில் புதியதாக கட்டிய கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் கணபதி பூஜை, ஹோமம், யாக பூஜையுடன் துவங்கியது. இரவு சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடுடன் கற்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவசுந்தர சிவாச்சாரியார் நடத்தினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, கால்நடைத்துறை ஆணையர் தர்மேந்திரா பிரதாப், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார், "மாஜி எஸ்.பி., கலியமூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி, திருச்சி வன அலுவலர் வெங்கடாஜலம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகன், இணை இயக்குனர் ஞானசம்பந்தம் மற்றும் அ.தி.மு.க.,வினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை ஐ.ஓ.பி., வங்கி அலுவலர் தங்கமணி அவரது சகோதரர்கள் குருநாதன், நாகராஜன், கல்லூர் கிராம இளைஞரணி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.