வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :1092 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 லட்சம் வசூல் ஆனது. அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பாக்கியலட்சுமி தலைமையில், செயல் அலுவலர் அருள் முன்னிலையில், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை தொகையை எண்ணினர். ரூ. 2,01,658 வசூல் ஆனது. இப்பணியில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். அலுவலக எழுத்தர் மிரேஷ்குமார் காணிக்கை என்னும் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.