/
கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சூரிய கிரகணத்தன்று 3 மணி நேரம் நடை சாத்தப்படும்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சூரிய கிரகணத்தன்று 3 மணி நேரம் நடை சாத்தப்படும்
ADDED :1091 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 25ம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூன்று மணி நேரம் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 25ஆம் தேதி அமாவாசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் வழக்கம் போல் நடைபெறும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று மாலை 4 மணிக்கு நடை சாத்தப்பட்டு சூரிய கிரகணம் முடிந்த பின் சாந்தி பூஜைகள் செய்து இரவு 7 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். என இதில் தெரிவித்துள்ளனர்.