உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் சிற்ப கூடத்தில் இருந்த அம்மன் சிலை மாயம்

கும்பகோணத்தில் சிற்ப கூடத்தில் இருந்த அம்மன் சிலை மாயம்

தஞ்சாவூர் : கும்பகோணத்தில், சிற்பக்கூடத்தில் இருந்த 2.5 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை மாயமானது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ராம் குமார், 33; மாற்றுத்திறனாளியான இவர், வலையபேட்டையில், உலோகச் சிலைகள் தயாரிப்பு பட்டறை வைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர்கள், 1.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 2.5 அடி உயரத்தில் காமாட்சியம்மன் உலோக சிலையை தயாரிக்க கூறியிருந்தனர். இதையடுத்து, ராம்குமார் தயாரித்த காமாட்சியம்மன் உலோகச் சிலையை அழகு படுத்தும் பணி மேற்கொண்டிருந்தார். சில நாட் களுக்கு முன், பட்டறையில் வைத்து பூட்டியிருந்த காமாட்சியம்மன் உலோகச் சிலை காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்தார்.இது பற்றி, கும்பகோணம் தாலுகா போலீசில் ராம்குமார் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !